Posted By :யோகி ஸ்ரீஜி Posted Date : 2018-06-06
குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி.?
ஆன்மிக அறிவியல் கலை:
தினம் ஒரு சிந்தனை.!
அனைவருக்கும் யோகி ஸ்ரீஜி-யின் இனிய காலை வணக்கம்.
குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி.?
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கணவனும் மனைவியும் வீட்டுப் பாடம் ( Home work.!) செய்யாமல் தங்களின் பணிகளுக்கு ஓய் கொடுத்துவிட்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க பழகிக் கொள்ளலாம். குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அன்று ஒருநாள் நடந்து கொள்ளலாம். மனைவியின் வேளைகளை கணவன் பகிர்ந்து கொள்ளலாம். முடிந்தால் அன்று ஒருநாள் சமையலுக்கு லீவு கொடுத்துவிட்டு மனைவி குழந்தைகளுடன் வெளியில் சென்று அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம். அவர்களுடன் பார்க்கு பீச்சு மால் அல்லது திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று அவர்களை சந்தோஷப் படுத்தலாம். அதேபோல் அன்று இரவும் அவர்களுக்கு விருப்பமான சிற்றுண்டியை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம். அன்றைய நாள் முழுவதும் முகம் கோணாமல அவர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்யலாம். இரவு படுக்கைக்கு செல்லுமுன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அன்றைய நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தம் கொள்ளலாம். மனைவி தன் கணவரிடத்திலும் கணவன் தன் மனைவியிடத்திலும் மிகவும் அன்பாக நடந்து கொள்ளலாம். குறையில்லாத மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. எனவே குறைநிறையோடு வாழக்கற்றுக் கொண்டு, கணவன் சூழ்நிலையை மனைவியும், மனைவியின் சூழ்நிலையை கணவனும் புரிந்து பக்குவமாக நடந்து கொண்டால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் ஓய்வு நாட்களில் மாதம் இரண்டு முறையோ அல்லது கட்டாயம் ஒருமுறையாவது இவ்வாறு வெளியில் அழைத்துச் சென்று குடும்பத்தை மகிழ்விக்கலாம். அல்லது வீட்டில் குடும்பத்துடன் ஒன்றாக இருந்து மனைவி குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்விக்கலாம். ஆரம்பத்தில் இதை நடைமுறைப்படுத்துவது சற்று கடினம்தான். ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.!
மீண்டும் நாளை சந்திப்போமா.!
வாழ்க நலமுடன்
யோகி ஸ்ரீஜி.